Advertisement

கல்பாக்கத்தில் அவசரநிலை ஒத்திகை: அச்சம் வேண்டாம்

கல்பாக்கம் அணுமின் நிலையத்தை மையமாகக் கொண்டு ஜூலை 17-ஆம் தேதி கதிரியக்க அவசரநிலை ஒத்திகை நடைபெற உள்ளதாக அணுசக்தித் துறையினர் அறிவித்துள்ளனர்.

☢️ கல்பாக்கத்தில் அவசரநிலை ஒத்திகை நடைபெறுகிறது 🚨

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சென்னை அணுமின் நிலையம் மற்றும் பாவினி (BHAVINI) நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் ஜூலை 17-ஆம் தேதி கதிரியக்க அவசரநிலை ஒத்திகை நடத்தப்பட உள்ளது. அணுமின் நிலையத்தில் எதிர்பாராத அவசரநிலை ஏற்பட்டால், பொதுமக்களை பாதுகாப்பாக மீட்பது மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பான நடைமுறைகளை சோதிக்கும் நோக்கில் இந்த ஒத்திகை ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

தற்போது பாவினி நிறுவனம் அமைத்துள்ள 500 மெகாவாட் திறன் கொண்ட முன்மாதிரி வேக ஈனுலை (PFBR) மின் உற்பத்தியை தொடங்குவதற்கான நடைமுறைகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் வழிகாட்டுதலின்படி இந்த அவசரநிலை ஒத்திகை நடத்தப்படுகிறது.

🚑 பல்வேறு துறைகள் இணைந்து பங்கேற்பு 👨‍🚒

இந்த ஒத்திகையில் வருவாய்த் துறை, பேரிடர் மேலாண்மை, மருத்துவம், காவல்துறை, தீயணைப்புத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு அரசு துறையினர் பங்கேற்கின்றனர். அவசரநிலை ஏற்பட்டால் ஒவ்வொரு துறையும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து முன்னதாகவே பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும், கல்பாக்கம் அவசரகால குழுத் தலைவரும் சென்னை அணுமின் நிலைய இயக்குநருமான செல்வகுமரன் மற்றும் பாவினி நிறுவனத் தலைவர் அல்லு ஆனந்த் ஆகியோர், ஒருங்கிணைந்த செயல்பாட்டின் அவசியத்தை அதிகாரிகளுக்கு விளக்கினர். இந்த ஒத்திகையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வீரப்பன் இன்சிடென்ட் கமாண்டராக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📢 பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை ✅

அணுசக்தித் துறையினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பாதுகாப்பு ஒத்திகை மட்டுமே என்பதால் பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய ஒத்திகைகள் மூலம் அவசரநிலை ஏற்பட்டால் அரசுத் துறைகளின் செயல்திறன், மீட்பு நடவடிக்கைகளின் வேகம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை பரிசோதிக்கப்படுகின்றன. இதன் மூலம் அணுமின் நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு நடைமுறைகள் மேலும் வலுப்பெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement