Advertisement

கல்பாக்கம் அணுமின் நிலைய விபத்து – வடமாநிலத் தொழிலாளி உயிரிழப்பு

கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வடமாநிலத் தொழிலாளி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் அணுமின் நிலையங்கள் மற்றும் அணு ஆராய்ச்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், புதிதாக எப்ஆர்எப்சி எனப் படும் மறுசுழற்சி முறையில் அணு மின்சாரம் தயாரிப் பதற்கான ஆலை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகளில், பல்வேறு வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப் படையில் பணிபுரிந்து வருகின்றனர்.

Advertisement

இந்த மையத்தின் கட்டுமான பணியில் சாரம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டிருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சோட்டா சூன்(43) என்பவர், மேலிருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த அவரை சக தொழி லாளர்கள் மீட்டு சதுரங்கப்பட்டினம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தகவல் அறிந்த கல்பாக்கம் காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement