Advertisement

WhatsApp மூலம் இலவச சட்ட ஆலோசனை; மத்திய அரசு புதிய சேவை அறிமுகம்

செங்கல்பட்டு உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் எளிதாக சட்ட ஆலோசனை பெறும் வகையில், மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய WhatsApp சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சேவையின் மூலம், சட்ட உதவி தேவைப்படும் நபர்கள் நேரடியாக வழக்கறிஞர்களின் ஆலோசனையை இலவசமாக பெற முடியும். குறிப்பாக சொத்து தகராறு, குடும்ப பிரச்சினைகள், சிவில் வழக்குகள், உரிமை தொடர்பான சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு சட்ட விவகாரங்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்படும்.

Advertisement

இதற்காக பொதுமக்கள் தங்களது WhatsApp மூலம் 72177 11814 என்ற எண்ணிற்கு ஒரு செய்தி அனுப்பினால் போதும். அதன் பின்னர் தேவையான தகவல்கள் பெறப்பட்டு, சட்ட ஆலோசனை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதியை எளிதாக மக்களிடம் கொண்டு சேர்க்கவும், பொருளாதார வசதி குறைவால் சட்ட உதவி பெற முடியாதவர்களுக்கு ஆதரவாகவும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்தி தங்களது சட்ட சந்தேகங்களுக்கு தீர்வு பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement