Advertisement

“தமிழ்த்தாய் வாழ்த்தை இருட்டடிப்பு செய்யச் சதி!” – வந்தே மாதரம் மசோதாவிற்கு கனிமொழி கடும் எதிர்ப்பு!

மாநிலங்களின் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் தமிழ்த்தாய் வாழ்த்தைப் படிப்படியாக இருட்டடிப்பு செய்யும் மறைமுக நோக்கத்துடன் வந்தே மாதரத்தைக் கட்டாயமாக திணிக்கும் சட்ட மசோதாவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி ஆவேசமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் வந்தே மாதரம் தேசியப் பாடலுக்குத் தேசியக் கீதத்திற்கு இணையான சம அந்தஸ்து வழங்கும் புதிய மசோதா தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வரும் சூழலில், இச்சட்ட மசோதாவுக்குத் தமிழகத்தின் ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன.

Advertisement

இது குறித்துத் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள கனிமொழி எம்பி, “வந்தே மாதரம் பாடலை வலிந்து திணிப்பதுடன், இதுவரை தமிழ்நாட்டில் அனைத்து அரசு விழாக்களிலும் முதல் பாடலாகப் பாடப்பட்டு வந்த தமிழ்த்தாய் வாழ்த்தை நிரந்தரமாக இருட்டடிப்பு செய்யும் நோக்கிலுள்ள இந்த ‘வந்தே மாதரம்’ சட்ட மசோதாவை ஒருபோதும் ஏற்க முடியாது” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், “மாநிலங்களின் சுயமரியாதைக்கும், தமிழர்களின் தாய்மொழிப் பற்றிற்கும் வேட்டு வைக்கும் வகையிலான இத்தகைய ஒருதரப்பான சட்ட மசோதாவைத் திமுக ஆணித்தரமாக எதிர்க்கும். கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான மத்திய அரசின் இந்த ஆதிக்கப் போக்கைக் கண்டித்துத் தொடர்ந்து குரல் கொடுப்போம்” எனக் காரசாரமாகத் தெரிவித்துள்ளார். கனிமொழியின் இந்த அதிரடி அறிக்கை தேசிய மற்றும் மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Advertisement

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement