Advertisement

வில்லனாக அவதாரம் – சண்முக பாண்டியன் படத்தில் இணையும் மோகன் ராஜா!

முன்னணி தமிழ் திரைப்பட இயக்குநரான மோகன் ராஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது நடிகராகவும், அதுவும் முதன்மை வில்லன் கதாபாத்திரத்திலும் களமிறங்கவுள்ளது திரையுலக வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், தனி ஒருவன் போன்ற பல வெற்றிப் படங்களைக் கொடுத்துத் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் மோகன் ராஜா. இவர் படம் இயக்கி நீண்ட காலம் ஆகிவிட்ட சூழலில், சமீபகாலமாகத் திரைப்படங்களில் பாடல்கள் எழுதுவதில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில், அவர் அடுத்த கட்டமாக நடிகராகத் தனது புதிய பயணத்தைத் தொடங்கவுள்ளார்.

Advertisement

இயக்குநர் திரு இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாணவேடிக்கை’ என்ற புதிய திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக ஷிவானி ராஜசேகர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த அதிரடித் திரைப்படத்தில்தான் இயக்குநர் மோகன் ராஜா மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார்.

இயக்குநராக முத்திரை பதித்த மோகன் ராஜா, முதல்முறையாகத் திரையில் வில்லனாகக் களமிறங்குவது ‘வாணவேடிக்கை’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் மோகன் ராஜாவின் கதாப்பாத்திரத் தோற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement