Advertisement

அரிய வகை எபோலா வைரஸ்: 80-பேர் உயிரிழப்பு

Democratic Republic of the Congo நாட்டில் அரிய வகை எபோலா வைரஸ் பரவல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கிழக்கு Ituri Province பகுதியில் ‘புந்திபுகியோ’ (Bundibugyo) வகை எபோலா வைரஸ் பரவி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பொதுவாக அதிகமாகக் காணப்படும் ‘ஜைர்’ (Zaire) வகை எபோலா வைரஸை விட இந்த புதிய வகை மாறுபட்டதும் அரிதானதுமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், எபோலா அறிகுறிகளுடன் நூற்றுக்கணக்கானோர் மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக அண்டை நாடுகளான Uganda மற்றும் South Sudan ஆகிய நாடுகளிலும் எச்சரிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. காங்கோவுடன் இந்த நாடுகளுக்கு உள்ள மக்கள் மற்றும் போக்குவரத்து தொடர்புகள் காரணமாக நோய் எல்லை தாண்டி பரவும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

எபோலா உலகிலேயே மிகவும் ஆபத்தான வைரஸ் நோய்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நோய் உடலின் உட்புற உறுப்புகளை கடுமையாக பாதித்து ரத்தப்போக்கு, உறுப்பு செயலிழப்பு மற்றும் மரணம் போன்ற விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக உடல்நீரின் மூலம் நோய் வேகமாக பரவுவதால், பொதுமக்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதார அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன.

Advertisement

உலக சுகாதார அமைப்பும் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிப்பு அதிகரித்தால் சர்வதேச சுகாதார அவசரநிலை அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement