Advertisement

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பங்கள் 31 பேருக்கு அரசு வேலை: நேரில் வழங்கினார் முதல்வர் விஜய்!

கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு, தற்காலிக அரசுப் பணி நியமன ஆணைகளைத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று நேரில் வழங்கினார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறைப்படி நடைபெற்ற இந்த அரசு நிகழ்வில், முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு, உயிரிழந்தவர்களின் தகுதியான வாரிசுதாரர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கிக் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த ஆறுதல்களைத் தெரிவித்தார். கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்குத் தற்காலிக அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் விஜய். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தகுதியான வாரிசுதாரர்களுக்குப் பணி ஆணை. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் நோக்கில், இந்தத் தற்காலிக அரசுப் பணிகள் கருணை அடிப்படையில் உடனடியாக வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கடந்த சில நாட்களாக இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்களும், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே காரசாரமான விமரிசனங்களும் எழுந்து வந்த சூழலில், முதல்வர் விஜய் கரூருக்கு நேரில் வருகை தந்து இப்பணி ஆணைகளை விநியோகித்துள்ளார். இந்த நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தவெக முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, கரூர் பகுதி பொதுமக்கள் மத்தியில் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

Advertisement

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement