Advertisement

செங்கல்பட்டில் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கும் பள்ளி மாணவர்கள்

செங்கல்பட்டில் பள்ளி மாணவ, மாணவிகள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு – சென்னை கடற்கரை தடத்தில், மூன்று தடங்களில் நாள்தோறும் 60க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகின்றன.

Advertisement

இந்நிலையில், சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து செங்கல்பட்டு ரயில் நிலையம் வந்து, இங்குள்ள பள்ளிகளுக்கு செல்லும் மாணவ – மாணவியர், நாள்தோறும் ரயில் நிலையத்தில் இருந்து குறுக்கு பாதையில் செல்ல தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். எனவே, ஆபத்தான முறையில் தண்டவாளங்களை கடந்து செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement