Advertisement

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் திகில் தருணம் – ஓடும் ரயிலில் சிக்கிய இளைஞரை காப்பாற்றிய ஆர்பிஎஃப் போலீஸ்

கண நேரத்தில் நடந்த விபத்தில் உயிர் பறிபோகும் நிலையில் இருந்த பயணியை, மின்னல் வேகத்தில் செயல்பட்ட காவலர் காப்பாற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவைச் சேர்ந்த 24 வயதான இளைஞர், குடும்பத்துடன் காரைக்கால் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது தண்ணீர் வாங்க இறங்கிய அவர், திரும்பும் நேரத்தில் ரயில் புறப்பட்டதால் அவசரமாக ஓடும் ரயிலில் ஏற முயன்றார்.

Advertisement

அப்போது நிலைதடுமாறி, ரயிலும் நடைமேடையும் இடையே சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார். இதைக் கண்ட பயணிகள் அதிர்ச்சியடைந்து அலறிய நிலையில், அங்கு பணியில் இருந்த ஆர்பிஎஃப் காவலர் பிரதீப் குமார் உடனடியாக ஓடி வந்து, சாமர்த்தியமாக இளைஞரை வெளியே இழுத்து உயிரைக் காப்பாற்றினார்.

இந்த சம்பவத்தால் ரயில் சில நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது. துரிதமாக செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய காவலருக்கு பயணிகள் மற்றும் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Advertisement

#Chengalpattu #TrainAccident #RPF #RailwaySafety #BreakingNewsTamil

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement