Advertisement

சிறுமியிடம் அத்துமீறல்; முதியவருக்கு 20 ஆண்டு சிறை

செங்கல்பட்டில் 6 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கில், 65 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த தாஸ் (65) என்பவர், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

இந்த வழக்கு செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணையின்போது அரசு தரப்பில் வழக்கறிஞர் லட்சுமி பல்வேறு ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து தாஸுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நேற்று (ஜூன் 12) தீர்ப்பளித்தார்.

Advertisement

இந்த தீர்ப்பு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதை மீண்டும் உறுதிப்படுத்துவதாக சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement