Advertisement

செங்கல்பட்டு மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்ச்சி விகிதம் 93.25%… மாணவிகள் மீண்டும் முன்னிலை!

செங்கல்பட்டு மாவட்டத்தில் 2025-26 கல்வியாண்டுக்கான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், மாவட்ட அளவில் மொத்த தேர்ச்சி விகிதம் 93.25 சதவீதமாக பதிவாகியுள்ளது.

மாவட்டம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உள்ளிட்ட மொத்தம் 239 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் தேர்வில் பங்கேற்றனர். இதில் 81 அரசு பள்ளிகள், 21 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 137 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அடங்கும்.

Advertisement

இந்த ஆண்டு மொத்தமாக 29,195 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் 13,737 மாணவர்களும், 15,458 மாணவிகளும் இடம்பெற்றனர். தேர்வு முடிவுகளில் மொத்தம் 27,223 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 12,429 மாணவர்களும், 14,794 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 90.48 சதவீதமாக இருந்த நிலையில், மாணவிகள் 95.70 சதவீத தேர்ச்சி பெற்று மீண்டும் முன்னிலை பெற்றுள்ளனர்.

Advertisement

கடந்த ஆண்டு மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 94.29 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் சற்று குறைந்திருந்தாலும், மாவட்டத்தின் மாநில தரவரிசை 28-ல் இருந்து 31 ஆக மாறியுள்ளது.

மேலும், மாவட்டம் முழுவதும் 57 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்துள்ளன. இதில் 2 அரசு பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன என்பது சிறப்பம்சமாகும்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement