Advertisement

வெப்ப அலை… விவசாயிகளுக்கு ஆலோசனைகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் வெப்ப அலை தாக்கத்தை சமாளிக்க விதை நேர்த்தி முதல் நுண்ணீர்ப்பாசனம் வரை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு வேளாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

📍செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் நிலவி வரும் வெப்ப அலை தாக்கத்தை கருத்தில் கொண்டு, விவசாயிகள் பயிர்களை பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வேளாண்மை இணை இயக்குநர் (பொ) து. செல்வபாண்டியன் அறிவுறுத்தியுள்ளார். அதிக வெப்பநிலை காரணமாக பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படாமல் இருக்க அறிவியல் முறையிலான சாகுபடி நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

🌱 விதை நேர்த்தி செய்த பிறகே விதைகளை விதைக்க வேண்டும். உயிர் உரங்களை பயன்படுத்தி மண்ணின் வளத்தை மேம்படுத்துவதுடன், நுண்ணீர்ப்பாசன முறையை பின்பற்றி நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நண்பகல் நேரங்களில் நீர்ப்பாசனம் செய்வதைத் தவிர்த்து, காலை அல்லது மாலை நேரங்களில் மட்டுமே பாசனம் மேற்கொள்ளுமாறும் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

💧 மண்ணின் ஈரப்பதத்தை பாதுகாக்க மூடாக்கு (Mulching) போன்ற முறைகளைப் பயன்படுத்த வேண்டும். தேவையற்ற நீர் ஆவியாதலைத் தடுக்கவும், பயிர்களின் ஆரோக்கியத்தை பேணவும் இந்த நடவடிக்கைகள் உதவும் என வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது. வெப்ப அலை காலங்களில் வேளாண்மைத் துறையின் தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பின்பற்றி பயிர்களை பாதுகாத்து மகசூல் இழப்பைத் தவிர்க்க வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement