Advertisement

செங்கல்பட்டில் ‘கேலோ இந்தியா’ வாள்வீச்சு பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம், கேலோ இந்தியா (Khelo India) திட்ட நிதியுதவியுடன் செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு வளாகத்தில் துவக்கநிலை வாள்வீச்சு (Fencing) பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் 30 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு தினசரி பயிற்சி வழங்கப்படும்.

இந்த பயிற்சி மையத்திற்கு தேசிய அளவில் சாதனை படைத்த, 40 வயதிற்குட்பட்ட ஒரு வாள்வீச்சு வீரர் அல்லது வீராங்கனை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட உள்ளார். விண்ணப்பதாரர் குறைந்தது 5 ஆண்டுகளாக செங்கல்பட்டு மாவட்டத்தில் வசித்து வர வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

சர்வதேச போட்டிகள் அல்லது அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.25,000 ஊதியம் வழங்கப்படும். எனினும், இது முழுமையாக தற்காலிக நியமனமாகும். இதன் அடிப்படையில் நிரந்தர அரசு பணிக்கான உரிமை கோர முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியானவர்கள் தங்களது விண்ணப்பங்களை 15.06.2026 முதல் 25.06.2026 மாலை 5.00 மணி வரை செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம் அல்லது dsochengalpattu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

Advertisement

மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703461 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்களுக்கான நேர்முகத் தேர்வு செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நடைபெறும். உடற்தகுதி, விளையாட்டுத் திறன், பெற்ற பதக்கங்கள் மற்றும் பயிற்சி வழங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இறுதி தேர்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி மற்றும் பிற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement