Advertisement

அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்: மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர் கூட்டரங்கில், அனைத்து துறை அலுவலர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும (CMDA) முதன்மை செயல் அலுவலரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான கார்த்திகா தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சி பணிகள், அரசு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் பல்வேறு துறைகளின் முன்னேற்றங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மு. வீரப்பன், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலசந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று தங்களது துறைகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தனர்.

Advertisement

📢 ஆதிதிராவிடர் நலத்துறை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு ஆய்வுக் கூட்டம்

அதேநாளில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர் கூட்ட அரங்கில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் மு. வீரப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஆதிதிராவிடர் சமூக நலத் திட்டங்களின் செயல்பாடு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

இந்த நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஐமன் ஜமால், மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனைகளில் பங்கேற்றனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement