Advertisement

செங்கல்பட்டு: சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு

செங்கல்பட்டு மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மகளிர் திட்டம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், ஒப்பந்த அடிப்படையில் “சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்” பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்டத்தின் 8 வட்டாரங்களில் பணியாற்ற தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தபட்சம் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். கணக்கிடும் திறன், கணினி பயன்பாட்டு அறிவு மற்றும் தகவல் தொடர்பு திறன் அவசியம். விண்ணப்பிக்கும் நாளில் வயது 35க்கு கீழ் இருக்க வேண்டும்.

Advertisement

மேலும், சுய உதவிக் குழு ஊக்குநராக குறைந்தது 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஊராட்சி அளவிலான கூட்டமைப்பைச் சேர்ந்த பெண் சுய உதவிக் குழு உறுப்பினராக இருப்பதும் கட்டாயமாகும்.

இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பது அவசியம். வங்கிகளில் பரிவர்த்தனை செய்த அனுபவம், கடன் விண்ணப்பங்கள் நிரப்பிய அனுபவம் மற்றும் Android கைபேசியைப் பயன்படுத்தி SMS, WhatsApp மற்றும் செயலிகளை இயக்கும் திறனும் இருக்க வேண்டும்.

Advertisement

உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பங்களை திட்ட இயக்குநர் / இணை இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், செங்கல்பட்டு என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் பெறப்படும் கடைசி நாள்: மே 29, 2026.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement