Advertisement

8-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது!

செங்கல்பட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்த 8-ஆம் வகுப்பு மாணவிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஆட்டோ டிரைவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.

செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திம்மாவரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (45). இவர் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறார். செங்கல்பட்டு – காஞ்சிபுரம் சாலையில் உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் ஆட்டோவை நிறுத்திச் சவாரி சென்று வரும் இவர், மகாலட்சுமி நகர், ஜே.சி.கே நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை மாத வாடகை அடிப்படையில் தினமும் காலை பள்ளியில் கொண்டு விடுவதையும், மாலை மீண்டும் வீடுகளில் கொண்டு சென்று விடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

Advertisement

1-ஆம் வகுப்பு பயின்ற காலம் முதல் பல குழந்தைகளைத் தனது ஆட்டோவில் பாதுகாப்பாக அழைத்துச் சென்று வந்ததால், பெற்றோர்களும் ஜெகதீஷ் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில், செங்கல்பட்டு தாலுகா எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் 12 வயதுடைய 8-ஆம் வகுப்பு மாணவி ஒருவரிடம், கடந்த இரண்டு மூன்று நாட்களாக ஜெகதீஷ் தொடர்ந்து பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த அந்த மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்துப் பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாகச் செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், ஆட்டோ டிரைவர் ஜெகதீஷை உடனடியாகக் கைது செய்தனர்.

Advertisement

அவர் மீது கடுமையான போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணைக்குப் பின்னர் செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் செங்கல்பட்டு மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறு வயது முதலே நம்பிக்கையுடன் குழந்தைகளை நம்பி அனுப்பி வைத்த ஆட்டோ ஓட்டுநரே இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்ட சம்பவம், அப்பகுதி மக்கள், சக மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement