Advertisement

BSNL-ல் 100 ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணியிடங்கள்; ஜூலை 3-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL (Bharat Sanchar Nigam Limited), 100 ஜூனியர் டெலிகாம் அதிகாரி (Junior Telecom Officer – JTO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு B.E., B.Tech., M.Tech. அல்லது M.Sc. பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.40,500 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தொலைத்தொடர்பு துறையில் அரசு நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் இளைஞர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப் பதிவு தற்போது நடைபெற்று வரும் நிலையில், ஜூலை 3, 2026 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் காலதாமதம் செய்யாமல் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் விவரங்கள் மற்றும் ஆன்லைன் விண்ணப்பத்திற்கு:

https://bsnlregistration.ibtexamination.com

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement