Advertisement

பயணிகள் தவறவிட்ட நகைகளை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வரும் ரஞ்சித், பயணிகள் தவறவிட்ட சுமார் 10 சவரன் தங்க நகைகளை பத்திரமாக மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்து நேர்மையின் எடுத்துக்காட்டாக திகழ்ந்துள்ளார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சில பயணிகளை கொடுங்கையூர் பகுதிக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்ற ரஞ்சித், அவர்கள் இறங்கி சென்ற பிறகு வாகனத்தில் நகைகள் இருந்ததை கவனித்தார். உடனடியாக நகைகளை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு, அதன் உரிமையாளர்களை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டார்.

Advertisement

பின்னர், காவல்துறையினரின் உதவியுடன் நகைகளின் உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதையடுத்து, கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் முன்னிலையில் சுமார் 10 சவரன் மதிப்புள்ள நகைகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

ரஞ்சித்தின் இந்த நேர்மையான செயலுக்கு ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர். மேலும், அவரை விரைவில் சிறப்பு விழாவில் கவுரவிக்க ஏற்பாடு செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

பொதுமக்களிடையிலும் ரஞ்சித்தின் செயல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்றைய சூழலில் மதிப்புமிக்க பொருட்களை ஆசைப்படாமல் உரியவர்களிடம் ஒப்படைத்த அவரது நேர்மை சமூக வலைதளங்களிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

நேர்மையும் மனிதநேயமும் இன்னும் சமூகத்தில் உயிர்ப்புடன் இருப்பதை நிரூபிக்கும் இந்த சம்பவம், பலருக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement