Advertisement

அரியனூரில் புதிய பேருந்து நிழற்குடை – அடிக்கல் நாட்டிய MLA

மதுராந்தகம் அடுத்த அரியனூர் கிராமத்தில் ரூ.6 லட்சம் செலவில் புதிய பேருந்து நிழற்குடை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.

அரியனூரில் பேருந்து நிழற்குடை அமைக்க ஊராட்சி நிர்வாகத்தினர் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ., மரகதம் குமரவேலிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, அவர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6 லட்சத்தை ஒதுக்கினார். இந்நிலையில், புதிய நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ., மரகதம் குமரவேல் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவர் சுதாகீர்த்தி ஜெயசந்திரன், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கீதா கார்த்திகேயன், அதிமுக ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், ஊராட்சி துணைத் தலைவர் தணிகைமலை, ஊராட்சிச் செயலாளர் துளசிலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement