Advertisement

அண்ணாமலைக்கு ஆதரவு தர குரோம்பேட்டை பாஜக முடிவு

சென்னை குரோம்பேட்டை பகுதியில், பாஜக குரோம்பேட்டை மண்டல் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மண்டல் தலைவர் குமார் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மண்டல் நிர்வாகிகள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு, கட்சியின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

Advertisement

கூட்டத்தின் முடிவில், 90 சதவீதத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னெடுத்து வரும் இயக்கத்துடன் பயணிப்பது என முடிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மண்டல் நிர்வாகத்தின் மையக்குழு உறுப்பினர்கள் முழுமையாக “We The Leaders” இயக்கத்தில் இணைய தீர்மானித்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, குரோம்பேட்டை மண்டல் நிர்வாக குழு ஒட்டுமொத்தமாக கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Advertisement

இந்த முடிவு குரோம்பேட்டை மற்றும் சுற்றுவட்டார அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement