Advertisement

லிப்ட் கேட்டுச் சென்ற பெண் தவறி விழுந்து பலி

செங்கல்பட்டு அடுத்த அஞ்சூர் கிராமத்தை சேர்ந்த சகிலா (40) என்பவர், திருப்போரூர் செல்ல அஞ்சூரில் இருந்து திருவடிசூலம் பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த நபரிடம் லிப்ட் கேட்டு சென்றதாக கூறப்படுகிறது.

பைக்கில் சென்றுக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சகிலா தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி சகிலா உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement