Advertisement

“தமிழக முதல்வரை சந்தித்தது பெருமைக்குரிய தருணம்!” – நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் நேரில் சந்தித்தது தமக்குக் கிடைத்த பெருமைக்குரிய தருணம் என்று தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். மேலும், இந்தச் சந்திப்பிற்குப் பிறகு தங்களுக்கு இடையேயான சகோதரத்துவமும் இணைப்பும் எப்போதும் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் நடிகர் சிவகார்த்திகேயன் அண்மையில் நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு குறித்தும், முதலமைச்சருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டும் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் (X) மற்றும் முகநூல் பக்கங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக முதல்வர் விஜய் சார் அவர்களைச் சந்தித்தது என் வாழ்நாளில் பெருமைக்குரிய ஒரு தருணமாக இருந்தது. சில பயணங்கள் உண்மையில் மிகவும் அற்புதமானவை. இந்தச் சந்திப்பின் மூலம் ஏற்பட்டுள்ள சகோதரத்துவமும், மன ரீதியான இணைப்பும் எப்போதும் தொடரும்” என்று மிகவும் நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

Advertisement

திரையுலகில் தனக்கு முன்னோடியாகவும், மூத்த நடிகராகவும் விளங்கிய ஒருவர் இன்று மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரைச் சந்தித்தது குறித்து சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள இந்தப் பதிவு ரசிகர்கள் மத்தியில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் சந்திப்பின் போது தற்போதைய தமிழ்த் திரையுலகின் வளர்ச்சி, கலைத்துறை சார்ந்த மேம்பாடுகள் மற்றும் பொதுவான சில விவகாரங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடியதாகக் கூறப்படுகிறது. முன்னணி இளம் நடிகர் சிவகார்த்திகேயன் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ள இந்தச் சம்பவம், அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் தற்பொழுது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

 

Advertisement

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement