Advertisement

அச்சிறுப்பாக்கத்தில் குரங்குகள் அட்டகாசம்… நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுராந்தகம் அருகே அச்சிறுப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உணவு, தண்ணீர் தேடி குரங்குகள் குடியிருப்புகளுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.

🐒 உணவு, தண்ணீர் தேடி குடியிருப்புகளுக்குள் குரங்குகள்… 😟

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்துள்ள அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியைச் சுற்றியுள்ள பள்ளிப்பேட்டை, மலைநகர், காந்திநகர், வெங்கடேசபுரம், உத்தமநல்லூர், திருமுக்காடு உள்ளிட்ட பகுதிகளை ஒட்டிய வனப்பகுதிகளில் ஏராளமான குரங்குகள் வாழ்ந்து வருகின்றன. வழக்கமாக காலை மற்றும் மாலை நேரங்களில் உணவு தேடி கிராமங்களுக்கு வரும் குரங்குகள், கடந்த சில மாதங்களாக அதிகளவில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. 🌳🐵

Advertisement

🚨 குழந்தைகள், முதியவர்கள் அச்சத்தில்… தாக்க முயலும் குரங்குகள் 😨

கிராமங்களில் வீடுகளுக்குள் புகுந்து உணவு மற்றும் குடிநீரை தேடும் குரங்குகளால் மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் உள்ள குடும்பங்கள், குரங்குகள் எப்போது வீட்டுக்குள் நுழையும் என்ற பயத்தில் வீடுகளின் கதவுகளை மூடி வைத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், குரங்குகளை விரட்ட முயற்சிக்கும் பாதசாரிகள் மற்றும் பொதுமக்களை அவை துரத்தி தாக்க முயல்கின்றன என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பெண்கள், முதியவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக வெளியே செல்ல முடியாத சூழ்நிலை நிலவுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 🚶‍♀️⚠️

🌿 வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை 🙏

வனப்பகுதிகளில் போதுமான உணவு மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்படாததே குரங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவதற்கான முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது தொடர்பாக பலமுறை வனத்துறையினரிடம் புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, வனவிலங்குகளின் இயற்கை வாழ்விடங்களில் தேவையான உணவு மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்துவதுடன், மனிதர்–வனவிலங்கு மோதலைத் தடுக்க தமிழக அரசு மற்றும் வனத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அச்சிறுப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். 🌱🐾

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement