Advertisement

50 கிலோ குட்கா பறிமுதல் – மதுராந்தகத்தில் 2 பேர் கைது

மதுராந்தகம் அருகே 50 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுராந்தகம் பகுதியில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், அங்குள்ள வீடுகள் மற்றும் கடைகளில் போலீசார் சோதனை நடத்தினர்.

Advertisement

அப்போது, செல்வராஜ் என்பவர் வீட்டில் 16 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது வீட்டில் 36 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் கைது செய்த போலீசார், குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement