Advertisement

2 சவரன் தங்க மோதிரம் திருட்டு – கில்லாடி பெண் கைது

2 சவரன் தங்க மோதிரம் திருட்டு சம்பவத்தில் தேனியில் நகையை அடகு வைத்த பெண்ணை கூடுவாஞ்சேரி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமமாலினி (46). இவர் கடந்த 9ஆம் தேதி கூடுவாஞ்சேரியில் செயல்பட்டு வரும் கல்யாண் ஜுவல்லரி கடைக்கு நகை வாங்குவது போல் வாடிக்கையாளர் வேடத்தில் சென்றுள்ளார்.

Advertisement

கடையில் பல்வேறு நகைகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த 2 சவரன் தங்க மோதிரத்தை யாருக்கும் தெரியாமல் திருடிக் கொண்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கடை நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் கூடுவாஞ்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், திருடப்பட்ட மோதிரத்துடன் ஹேமமாலினி தேனிக்கு சென்றதும், அங்குள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அந்த மோதிரத்தை அடகு வைத்திருந்ததும் தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து தனிப்படை போலீசார் தேனிக்குச் சென்று ஹேமமாலினியை கைது செய்து கூடுவாஞ்சேரிக்கு அழைத்து வந்தனர். பின்னர் விசாரணை முடித்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், ஹேமமாலினியை சிறையில் அடைத்தனர்.

#2சவரன்தங்கமோதிரம்திருட்டு #நகைத்திருட்டு #கூடுவாஞ்சேரி #ஹேமமாலினி #கல்யாண்ஜுவல்லரி #மாம்பாக்கம் #தேனி #காவல்துறை #பெண்கைது #தங்கமோதிரம் #திருட்டுவழக்கு #தனிப்படைகாவல்துறை #2SovereignGoldRingTheft #GoldRingTheft #Guduvanchery #Hemamalini #KalyanJewellers #Mambakkam #Theni #Police #WomanArrested #GoldJewellery #TheftCase #PoliceInvestigation #SpecialTeamPolice

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement