Advertisement

101 தட்டு சீர்வரிசை! திமுக வேட்பாளர் கார்த்திக் தண்டபாணிக்குத் தாய்மார்கள் வரவேற்பு!

செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் MKD கார்த்திக் தண்டபாணி இன்று கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, நந்திவரம் 18-வது வார்டு பகுதிக்கு அவர் வருகை தந்தபோது, தமிழர்களின் பாரம்பரியத்தை விஞ்சும் வகையில் ஒரு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இப்பகுதிப் பெண்கள் தங்கள் வீட்டுப் பிள்ளையாகக் கருதி 101 தட்டு சீர்வரிசைகளை ஏந்தி வந்து வேட்பாளரை வரவேற்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

Advertisement

வார்டு செயலாளர் கார்த்திக் தலைமையில் திரண்ட நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே வேட்பாளர் கார்த்திக் தண்டபாணி வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அப்பகுதித் தாய்மார்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். இந்த வரவேற்பின் உச்சகட்டமாக, 101 தட்டுகளில் பழங்கள், சாக்லேட்கள், உலர் பழங்கள், குளிர்பானங்கள், வாழைத்தார்கள், நவதானியங்கள், இளநீர் மற்றும் நுங்கு எனச் சீர்வரிசைப் பொருட்களை ஏந்தி பெண்கள் ஊர்வலமாக வந்தனர். மேளதாளங்கள் அதிர, வேட்பாளருக்கு வீரவால் மற்றும் செங்கோல் வழங்கித் தொண்டர்கள் உற்சாகப்படுத்தினர்.

தொடர்ந்து மக்கள் மத்தியில் உரையாற்றிய கார்த்திக் தண்டபாணி, “நான் ஏற்கனவே கூடுவாஞ்சேரி நகர்மன்றத் தலைவராகப் பணியாற்றிய காலத்தில், இந்தப் பகுதிகளில் பல அடிப்படை வசதிகளையும் நலத்திட்டப் பணிகளையும் முன்னின்று செய்துள்ளேன். அந்த நற்பணிகளை அங்கீகரிக்கும் வகையில், இந்தச் சட்டமன்றத் தேர்தலில் எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கி உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்,” என உருக்கமாகக் கேட்டுக்கொண்டார். திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்ற இந்த வாக்கு சேகரிப்புப் பயணம், தொகுதி முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement

dmk-candidate-karthik-dhandapani-receives-grand-welcome-with-101-plates-in-guduvanchery

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement