Advertisement

ரூ.131 கோடி புதிய பேருந்து நிலையத்தை அமைச்சர் ஆய்வு

செங்கல்பட்டில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA) சார்பில் ரூ.131 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பி. ராஜ்குமார் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு நகரின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமானப் பணிகள் மற்றும் இறுதிக்கட்ட ஏற்பாடுகளை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

இந்த ஆய்வின்போது, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் செ. தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் மு. வீரப்பன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், போக்குவரத்து மேலாண்மை அமைப்புகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் விவரங்களை கேட்டறிந்தார். மேலும், மீதமுள்ள பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

Advertisement

புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டால் செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், பயணிகளுக்கு மேம்பட்ட வசதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement