Advertisement

மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் – வாகன ஓட்டிகள் அவதி

மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலையில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்துள்ளது.

மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் தீவிர தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

Advertisement

திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மதுராந்தகம், அச்சரப்பாக்கம், ஒரத்தி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இதன் காரணமாக மதுராந்தகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேர்தல் பிரசார வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை-திருச்சி மற்றும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஏற்கெனவே காலாண்டு விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி ஏராளமான வாகனங்கள் சென்ற நிலையில், தற்போது மதுராந்தகம் தொகுதியில் மூன்று கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

#மதுராந்தகம் #தேசியநெடுஞ்சாலை #போக்குவரத்துநெரிசல் #5கிமீநெரிசல் #மதுராந்தகம்இடைத்தேர்தல் #தேர்தல்பிரசாரம் #உதயநிதிஸ்டாலின் #ஆதவ்அர்ஜுனா #சீமான் #பரந்தாமன் #மரகதம்குமரவேல் #ஜானகிராமன் #செங்கல்பட்டு #Madurantakam #NationalHighway #TrafficJam #TrafficCongestion #5KmTrafficJam #MadurantakamByElection #ElectionCampaign #UdhayanidhiStalin #AadhavArjuna #Seeman #Chengalpattu

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement