மதுராந்தகம் இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம் இருந்து தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகள், காவல்துறையினர் உள்ளிட்டோருக்கும், வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்களிக்க இயலாத 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் முன்கூட்டியே வாக்களிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, மதுராந்தகம் அருகேயுள்ள மோசேரி பகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களான கன்னியப்பன் மற்றும் துரைக்கண்ணு ஆகியோரிடம் தேர்தல் அலுவலர்கள் நேரடியாக வீடுகளுக்குச் சென்று தபால் வாக்குகளை சேகரித்தனர்.
பாதுகாப்பு வசதிகள் மற்றும் ரகசிய வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளுடன் தேர்தல் அலுவலர்கள் வீடுகளுக்கு வந்த நிலையில், இருவரும் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை செலுத்தி ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.
வாக்குச்சாவடிக்கு நேரில் வர இயலாத முதியோர்களின் வீடுகளுக்கே தேர்தல் அலுவலர்கள் சென்று தபால் வாக்குகளைப் பெறுவது, அவர்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9ஆம் தேதி நடைபெற உள்ளது.
#மதுராந்தகம்இடைத்தேர்தல் #மதுராந்தகம் #தபால்வாக்கு #தேர்தல்ஆணையம் #முதியோர்வாக்கு #85வயதுக்கு_மேற்பட்டோர் #மாற்றுத்திறனாளிகள் #மோசேரி #தேர்தல்2026 #வாக்குப்பதிவு #MadurantakamByElection #Madurantakam #PostalBallot #ElectionCommission #SeniorCitizens #85PlusVoters #PersonsWithDisabilities #MoserI #TamilNaduElection #Voting2026












