மதுராந்தகம் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் வீரப்பன் தலைமையில் நடைபெற்றது.
மதுராந்தகம் இடைத்தேர்தலையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு கூட்டத்தில் விளக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.
தேர்தல் பிரசாரம், பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், சுவரொட்டிகள், பேனர்கள் உள்ளிட்ட விளம்பரங்கள், தேர்தல் பிரசாரத்துக்கான அனுமதி பெறும் நடைமுறைகள் மற்றும் தேர்தல் செலவினங்களை கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டது.
மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் பேனர்கள், போஸ்டர்கள் மற்றும் சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.
மதுராந்தகம் இடைத்தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்துவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முழுமையாக கடைபிடித்து ஒத்துழைக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் தொடர்புடைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
#மதுராந்தகம் #மதுராந்தகம்_இடைத்தேர்தல் #இடைத்தேர்தல் #செங்கல்பட்டு #செங்கல்பட்டு_மாவட்டம் #தேர்தல் #தேர்தல்_முன்னேற்பாடு #தேர்தல்_நடத்தை_விதிமுறைகள் #தேர்தல்_ஆணையம் #தமிழ்நாடு_தேர்தல்













