மதுராந்தகம் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
தமிழகத்தில் காலாண்டுத் தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுடன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் தொடர் விடுமுறையாக அமைந்துள்ளன. இதனால் சென்னையில் வசித்து வரும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு வாகனங்களில் புறப்பட்டுச் செல்கின்றனர்.
இதன் காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து, மதுராந்தகம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
படாளம், கருங்குழி, மேலவலம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
#மதுராந்தகம் #போக்குவரத்துநெரிசல் #காலாண்டுவிடுமுறை #சென்னைதிருச்சிநெடுஞ்சாலை #படாளம் #கருங்குழி #மேலவலம்பேட்டை #வாகனநெரிசல் #விடுமுறை #சொந்தஊர் #Madurantakam #TrafficJam #QuarterlyHoliday #ChennaiTrichyHighway #Padalam #Karunguzhi #Melavalampettai #TrafficCongestion #HolidayRush #TamilNadu












