நெல் கொள்முதல் நிலையம் கோரி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட பட்டிக்காட்டு கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை வலியுறுத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலையில் நெல் மூட்டைகளை சுமந்தபடி பேரணியாக வந்த விவசாயிகள், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு திறந்தவெளியில் நெல்லைக் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களது கோரிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். ஆனால், மாவட்ட ஆட்சியர் அலுவல் பணியில் இருந்ததால், விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் உடனடியாக வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பட்டிக்காட்டு கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையால், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
#நெல்கொள்முதல்நிலையம் #விவசாயிகள்போராட்டம் #விவசாயிகள் #நெல்கொள்முதல் #பட்டிக்காட்டு #திருக்கழுக்குன்றம் #செங்கல்பட்டு #மாவட்டஆட்சியர்அலுவலகம் #விவசாயிகள்கோரிக்கை #காத்திருப்புபோராட்டம் #PaddyProcurementCentre #FarmersProtest #Farmers #PaddyProcurement #Pattikattu #Thirukalukundram #Chengalpattu #CollectorOffice #FarmersDemand #Protest












