Advertisement

செங்கல்பட்டு. சென்னையில் ஆக.4 மின்தடை…

பராமரிப்பு பணிகளையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆகஸ்ட் 4-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அமல்படுத்தப்பட உள்ளது.

⚡ பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்தடை அறிவிப்பு 🔧

செங்கல்பட்டு மாவட்டத்தில் மின்வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஆகஸ்ட் 4) செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட நாளை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்தடை அமலில் இருக்கும். மின்விநியோகத்தை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், குறிப்பிட்ட நேரத்தில் மின்சாரம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisement

📍 எந்தெந்த பகுதிகளில் மின்தடை? 🏘️

பராமரிப்பு பணிகள் திட்டமிட்ட நேரத்திற்குள் முடிந்தால், அதற்கு முன்னதாகவே மின்விநியோகம் மீண்டும் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்வரும் பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும் என எதிர்பார்க்கப்டுகிறது

வேளச்சேரி: சாரதி நகர், தாம்பரம்–வேளச்சேரி மெயின் ரோடு, மாதவமணி அவென்யூ, சீதாராம் நகர்.

Advertisement

அடையாறு: காந்தி மண்டபம் சாலை, சர்தார் படேல் சாலை, கோட்டூர்புரம், ஸ்ரீ நகர் காலனி, வெங்கடபுரம், சின்னமலை, தரமணி, எல்லையம்மன் கோவில் தெரு, கானகம், காளிகுன்றம், பள்ளிப்பட்டு, ஸ்ரீராம் நகர், நேரு நகர் 1 முதல் 4வது தெருக்கள், கே.பி. நகர் 1 முதல் 5வது மெயின் சாலைகள், அடையாறு 6வது மெயின் சாலை, கோவிந்தராஜபுரம், பக்தவச்சலம் நகர் 1 முதல் 5வது சாலைகள்.

முடிச்சூர்: அஷ்டலட்சுமி நகர், மகாலட்சுமி நகர், குமரன் நகர், ஏ.என். காலனி, மணிமங்கலம் மெயின் ரோடு, சாஸ்திரி நகர், கணேசபுரம் மெயின் ரோடு.

மேடவாக்கம்: பெரும்பாக்கம் சேகரன் மால், கைலாஷ் நகர், ஸ்ரீ பெருமாள் நகர், ஆண்டனி நகர், பஜனை கோவில் தெரு, நூக்கம்பாளையம் சாலை, மடம்பாக்கம் கண்ணதாசன் தெரு, கருணாநிதி 1 முதல் 7வது தெருக்கள், விசாலாட்சி நகர், ஜான் தெரு, தாமஸ் தெரு, விக்னராஜபுரம் 6வது தெரு, கோபாலபுரம் நகர், விக்னராஜபுரம் மோஹி ஃப்ளோரன்ஸ், குரு கணேஷ் நகர், பார்த்தசாரதி நகர், பள்ளிக்கரணை ராஜலட்சுமி நகர், வள்ளல் பாரி நகர், சாய் பாலாஜி நகர், கிருஷ்ணா நகர், துளுக்காத்தம்மன் கோவில் மெயின் சாலை, அருண் நகர், வெங்கடேஸ்வரா நகர், ஜெயபால் நகர், மல்லிகேஸ்வரன் நகர், ஆதிசாமி நகர்.

செயின்ட் தாமஸ் மவுண்ட்: ராமர் கோவில் தெரு, மவுண்ட்–பூந்தமல்லி சாலை, நாசரத்தபுரம், கணபதி காலனி, வசந்தம் நகர், கலைஞர் நகர், தண்டுமா நகர், போலீஸ் குடியிருப்பு, செவன் ஹில்ஸ் தெரு, மீனம்பாக்கம், பாண்டியன் தெரு, மரிசன் 1 முதல் 6வது தெருக்கள், திருவள்ளுவர் நகர், எம்.கே.என். சாலை, குமரன் நகர், குளத்துமேடு, மங்களியம்மன் கோவில் தெரு, டிபன்ஸ் காலனி, பர்மா காலனி, கரையார் கோவில் தெரு, நார்த் பரேட் ரோடு, இந்திரா நகர், ஆபிசர் டிரெயினிங் அகாடமி, நேவி ரெசிடென்சி பகுதி, வுட்கிரீக் கன்ட்ரி, துளசிங்கபுரம், மாரியாபுரம், மாத்தியாஸ் நகர், யூரோப்பியன் லைன், பஜார் சாலை, மேட்டு தெரு, ஆர்காட் பேட்டை, ஹாப்மேன் 1 மற்றும் 2வது தெருக்கள், வி.ஜி.பி. மர்பி ஸ்கொயர், நோபல் தெரு, கண்ணன் காலனி, ஆசிரியர் காலனி, எம்.ஜி.ஆர். நகர்.

📢 பொதுமக்களுக்கு முக்கிய அறிவுரை 🙏

மின்தடை காரணமாக வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் அன்றாட பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க, தேவையான பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக்கொள்ளுமாறு மின்வாரியம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மின்சாதனங்களை பாதுகாப்பாக பயன்படுத்தவும், மின்விநியோகம் மீண்டும் தொடங்கும் நேரத்தில் கவனமாக இருக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement