செங்கல்பட்டில் கொட்டிய மழை: குளிர்ச்சியான சூழல்: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவி வருவதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழையும், செங்கல்பட்டு உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. செங்கல்பட்டு, வல்லம், ஆலப்பாக்கம், மேலமையூர், திம்மாவரம், ஆத்தூர், பரனூர், மகேந்திரா சிட்டி, சிங்கப்பெருமாள்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
இரவு நேரத்தில் தொடர்ந்து பெய்த மழையால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. மேலும், மழை காரணமாக செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
#செங்கல்பட்டு #செங்கல்பட்டுமழை #மழை #வானிலை #தமிழகமழை #மழைநிலவரம் #Chengalpattu #ChengalpattuRain #TamilNaduWeather













