Advertisement

அரிவாள் வெட்டுக்கு போட்டியாக மின்வெட்டு – உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்

அரிவாள் வெட்டுக்கு போட்டியாக மின்வெட்டு நிலவுவதாகவும், முதல்வர் தொகுதியிலேயே மின்சாரம் இல்லாமல் மக்கள் வீதியில் இறங்கி போராடுவதாகவும் மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார். திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

மதுராந்தகம் தொகுதியில் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். திமுக வேட்பாளர் பரந்தாமன் படித்தவர், அன்பானவர் என்றும், தேர்தலுக்கு தேர்தல் கொள்கையை மாற்றிக்கொள்ளாதவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் சுமார் 30 நிமிடங்கள் பிரசாரம் செய்தபோது திமுகவை பலமுறை குறிப்பிட்டதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார். திமுகவைப் பற்றி தங்களைவிட முதல்வரே அதிகமாக பிரசாரம் செய்துவிட்டுச் சென்றதாகவும் அவர் கூறினார்.

சட்டப்பேரவை நடவடிக்கைகள் குறித்துப் பேசிய உதயநிதி, கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு பதிலாக ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் பாடல்கள் பாடுவதாக விமர்சித்தார். சட்டப்பேரவை “சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சியாக மாறிவிட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மக்களின் பிரச்சினைகள் சட்டப்பேரவையில் எதிரொலிக்க மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Advertisement

முதல்வர் தேர்தலுக்கு முன்பு அளித்ததாக கூறப்படும் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500, வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,500, ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், கடந்த சில மாதங்களில் அதிக அளவில் கொலைகள் மற்றும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெற்றுள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார். வண்டலூரில் பள்ளி மாணவிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பாகவும், மதுராந்தகத்தில் சிறுமி ஒருவர் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாகவும் அவர் கேள்வி எழுப்பினார்.

அரசு அறிவித்துள்ள “சிங்கப்பெண்” காவல் படை குறித்தும் கேள்வி எழுப்பிய உதயநிதி, அது அறிவிப்பாக மட்டுமே இருப்பதாக விமர்சித்தார்.

மேலும், மதுராந்தகம் தொகுதியில் மின்வெட்டு பிரச்சினை இருப்பதாகக் கூறிய அவர், முதல்வரின் தொகுதியிலேயே மின்சாரம் இல்லாமல் மக்கள் வீதியில் இறங்கி போராடும் நிலை ஏற்பட்டுள்ளதாக விமர்சித்தார்.

மாற்றம் வேண்டும் என வாக்களித்த மக்களுக்கு தற்போதைய ஆட்சியில் ஏமாற்றமே கிடைத்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார். மதுராந்தகம் இடைத்தேர்தலில் பரந்தாமனை வெற்றி பெறச் செய்து, இந்த ஆட்சிக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்றும் அவர் தனது பிரசாரத்தில் கேட்டுக்கொண்டார்.

#அரிவாள்வெட்டுக்குபோட்டியாகமின்வெட்டு #உதயநிதிஸ்டாலின் #உதயநிதி #மதுராந்தகம் #மதுராந்தகம்இடைத்தேர்தல் #பரந்தாமன் #திமுக #மின்வெட்டு #மின்சாரபிரச்சினை #தேர்தல்பிரசாரம் #செங்கல்பட்டு #தமிழகஅரசியல் #UdhayanidhiStalin #PowerCut #Madurantakam #MadurantakamByElection #Paranthaman #DMK #PowerOutage #ElectionCampaign #Chengalpattu #TamilNaduPolitics

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement