திருப்போரூரில் த.வெ.க எம்எல்ஏ விஜயராஜ் அன்னதானம்

0
8

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு திருப்போரூரில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் மே 28ஆம் தேதி உலக பட்டினி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகளவில் பசி மற்றும் உணவு பற்றாக்குறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான விஜய், தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு அன்னதானம் வழங்குமாறு கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேருந்து நிலையத்தில் த.வெ.க சார்பில் சிறப்பு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் தையூர் தீனா தலைமையில் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் திருப்போரூர் தொகுதி எம்எல்ஏ விஜயராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானத்தை வழங்கினார். அப்போது ஏழை, எளிய மக்கள் மற்றும் பயணிகளுக்கு உணவு வழங்கப்பட்டு சமூக நலப் பணியின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.

விழாவில் மாவட்ட இணைச் செயலாளர் வீரா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் பொன்மார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் த.வெ.க சார்பில் அன்னதான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த அன்னதான நிகழ்ச்சி பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றதுடன், சமூக சேவையில் அரசியல் கட்சிகளின் பங்களிப்பை வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.