Advertisement

“எனக்கான நபர் இவர் தான்!” – நடிகை சம்ரின் கவுர் காதல் அறிவிப்பு!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் மற்றும் பாலிவுட் நடிகை சம்ரின் கவுர் ஆகியோர் தங்களது காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஒன்றாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து “எனக்கான நபர்” என நடிகை சம்ரின் கவுர் பதிவிட்டுள்ள உருக்கமானப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகையான சம்ரின் கவுர், கபில் தேவின் பயோபிக் திரைப்படமான ’83’, பஞ்சாபி திரைப்படமான ‘சர்தார் ஜி 2’ உள்ளிட்ட பல திரைப்படங்களிலும், ஏராளமான பிரபலாமான இசை ஆல்பங்களிலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஆவார்.

Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கும், நடிகை சம்ரின் கவுரும் கடந்த சில காலமாக ரகசியமாக டேட்டிங் செய்து வருவதாக விளையாட்டு மற்றும் சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த விகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நடிகை சம்ரின் கவுர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருவரும் ஒன்றாக இருக்கும் நெகிழ்ச்சியான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில், அர்ஷ்தீப் சிங்கை “எனக்கான நபர்” (My Person) என குறிப்பிட்டுத் தங்களது காதலை உலகிற்குப் பறைசாற்றியுள்ளார். நீண்ட நாட்களாக பரவி வந்த வதந்திகளுக்குப் பின் இந்த ஜோடி தங்களது காதலை வெளிப்படையாக உறுதி செய்துள்ளதைத் தொடர்ந்து, கிரிக்கெட் வீரர்கள், திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இந்த ஜோடிக்குத் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement