Advertisement

“அவர் ஒரு ஜீனியஸ்!” – கங்கனா ரணாவத்தைப் பாராட்டித் தள்ளிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

மனதில் பட்டதை எப்போதும் தைரியமாகப் பேசி பலமுறை விவாதப் பொருளாகும் பாலிவுட் நடிகையும் எம்பியுமான கங்கனா ரணாவத்தைப் பாராட்டித் தள்ளியுள்ளார் பிரபல தென்னிந்திய நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி.

பாலிவுட் திரையுலகின் முன்னனி நடிகையான கங்கனா ரணாவத், தற்போது லோக்சபா எம்பியாகவும் (MP) மக்கள் பணியாற்றி வருகிறார். எதையும் ஒளிவுமறைவின்றி நேருக்கு நேராகவும் தைரியமாகவும் பேசக்கூடிய இவரின் பேச்சிற்குத் திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வரிசையில், தென்னிந்தியத் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா லட்சுமியும் கங்கனாவின் பேச்சுத் திறமைக்குத் தீவிர ரசிகையாக மாறியுள்ளார்.

Advertisement

கங்கனா ரணாவத் குறித்துப் பேசிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, “தனது சொந்த முயற்சியாலும் உழைப்பாலும் நன்றாகப் பேசக் கற்றுக்கொண்டு, ஒரு சிறந்த பேச்சாளராக கங்கனா உருவெடுத்த விதத்தை நான் மிகவும் ரசிக்கிறேன். குறிப்பாகத் தற்போதைய பார்லிமென்டில் அவர் ஆற்றும் உரைகளும், அவரது துணிச்சலான கருத்துகளும் எனக்கு ரொம்பவே பிடிக்கும். உண்மையிலேயே அவர் ஒரு ஜீனியஸ்” எனப் பூரிப்போடு தெரிவித்துள்ளார்.

பொதுவாக கங்கனா ரணாவத்தின் கருத்துகள் சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், தென்னிந்திய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி அவரைப் பகிரங்கமாகப் பாராட்டி ‘ஜீனியஸ்’ எனக் கூறியிருப்பது சினிமா மற்றும் அரசியல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement