Advertisement

“மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் குழு!” – நிதி வருவாயைப் பெருக்கத் தமிழக அரசு நடவடிக்கை!

 

தமிழ்நாட்டின் நிதி ஆதாரங்களைப் பெருக்கவும், வரி மற்றும் வரிசாரா வருவாய்களை அதிகரிக்கவும் வழிமுறைகளைக் கண்டறிந்து பரிந்துரைக்க மத்திய திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் 6 பேர் கொண்ட உயர்மட்ட நிபுணர் குழுவை அமைத்துத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Advertisement

மாநிலத்தின் சொந்த வரி வருவாய் (SoTR) மற்றும் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) விகிதம் கடந்த இரு பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்குச் சரிந்துள்ளதைத் தொடர்ந்து, நிதியியல் கசிவுகளைத் தடுத்து வருவாயைச் சீரமைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிதித் துறை பிறப்பித்துள்ள அரசாணை (G.O. Ms. No. 148) மூலம் இக்குழு அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நிபுணர் மாண்டேக் சிங் அலுவாலியா தலைவராகப் பொறுப்பேற்கும் இக்குழுவில், தேசிய பயன்பாட்டுப் பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின் (NCAER) பேராசிரியர் டாக்டர் கே.பி. கிருஷ்ணன், வரிக் கொள்கை நிபுணர் அர்பிந்த் மோடி, மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (CBEC) முன்னாள் தலைவர் நஜீப் ஷா, தமிழக நிதித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் எம்.ஏ. சித்திக் மற்றும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (MIDS) இயக்குநர் டாக்டர் எம். சுரேஷ் பாபு ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நிதித் துறை இணைச் செயலாளர் ராஜா கோபால் சுன்கரா இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுவார்.

Advertisement

மாநிலத்தின் வரி மற்றும் வரிசாரா வருவாயைப் பெருக்குவது, புதிய வருவாய் ஆதாரங்களைக் கண்டறிவது, பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களைப் பணமாக்குவது (Asset Monetization) மற்றும் வரி ஏய்ப்புகளைத் தடுத்துப் புதிய தொழில்நுட்ப வழிகளில் வருவாயை உயர்த்துவது குறித்து இக்குழு ஆராயும். 3 மாத காலத்திற்குள் தனது முழுமையானப் பரிந்துரை அறிக்கையை இக்குழு அரசிடம் சமர்ப்பிக்கவுள்ளது.

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement