Advertisement

பையனூர் சாலை விபத்து: கவிழ்ந்த வேன் மீது அரசு பேருந்து மோதல்; 3 பெண்கள் பலி, 20 பேர் காயம்!

செங்கல்பட்டு மாவட்டம், பழைய மாமல்லபுரம் சாலையில் பையனூர் அருகே மாடு குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த சுற்றுலா வேன் மீது அரசு பேருந்து மோதிய கோர விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாடு குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த வேன்

மாமல்லபுரத்தில் இருந்து கேளம்பாக்கத்தில் உள்ள பட்டர்ஃபிளை (Butterfly) நிறுவனத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு மகேந்திரா டூரிஸ்ட் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது.

Advertisement

அப்போது பழைய மாமல்லபுரம் சாலையில் பையனூர் அருகே சென்றபோது, திடீரென மாடு குறுக்கே வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது.

கவிழ்ந்த வேன் மீது அரசு பேருந்து மோதல்

அந்த நேரத்தில் எதிர்திசையில் திருப்போரூரில் இருந்து மாமல்லபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, சாலையில் கவிழ்ந்து கிடந்த வேன் மீது மோதியது.

Advertisement

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேனில் பயணம் செய்த 20 பெண்கள் காயமடைந்தனர்.

போலீசார் விசாரணை

விபத்து குறித்து தகவலறிந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement