Advertisement

தீபாவளி பண்டிகைக்கு சிறப்புப் பேருந்துகள் – மறைமலை நகர் தற்காலிக பேருந்து நிலையம் தயார்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக மறைமலை நகரில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விளையாட்டு மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையம்

மறைமலை நகர் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. நாளை முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Advertisement

இதன்படி, மறைமலை நகரில் அமைக்கப்படும் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, சிதம்பரம், கடலூர், பண்ருட்டி, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதற்காக விளையாட்டு மைதானத்தில் பயணிகள் காத்திருப்பதற்குப் பந்தல் அமைத்தல், பெயர்ப் பலகைகள் நிறுவுதல், குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

Advertisement

கிளாம்பாக்கத்திலிருந்து இலவச இணைப்புப் பேருந்து வசதி

கடந்த ஆயுத பூஜை பண்டிகையின்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மாநகர இணைப்புப் பேருந்துகள் மூலம் பயணிகள் இலவசமாக மறைமலை நகர் தற்காலிக பேருந்து நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு, அங்கிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதேபோன்ற ஏற்பாடு தீபாவளி பண்டிகையின்போதும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான பணிகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் சிரமமின்றிப் பயணம் மேற்கொள்ளும் வகையில் இந்தத் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement