Advertisement

செங்கல்பட்டு போதைப் பொருட்கள் அழிப்பு: ரூ.9 கோடி மதிப்பிலான 1,760 கிலோ கஞ்சா தீயிட்டு எரிப்பு!

செங்கல்பட்டு அருகே தென்மேல்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கழிவுகள் எரியூட்டும் மையத்தில், தமிழகம் முழுவதும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ரூ.9 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன. இதில் 1,760 கிலோ கஞ்சா, 250 கிராம் மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப் பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டன.

13 மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள்

தமிழகத்தில் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்கும் வகையில், போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களை நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் உரிய சட்ட நடைமுறைகளின்படி அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், ராமநாதபுரம், சேலம், வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் 13 மாவட்டங்களில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் அழிப்பதற்காக செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கழிவுகள் எரியூட்டும் மையத்திற்குக் கொண்டு வரப்பட்டன.

Advertisement

1,760 கிலோ கஞ்சா, 250 கிராம் மெத்தம்பெட்டமைன் அழிப்பு

அங்கு கொண்டு வரப்பட்ட போதைப் பொருட்களில் 1,760 கிலோ கஞ்சா, 250 கிராம் மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப் பொருட்கள் இடம்பெற்றிருந்தன. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.9 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அழிப்பு நடவடிக்கை

சுமார் ரூ.9 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை அழிக்கும் பணிகள், போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றன.

பல்வேறு மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் முறையாகப் பிரிக்கப்பட்டு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டன.செங்கல்பட்டு போதைப் பொருட்கள் அழிப்பு

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement