மதுராந்தகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் 250-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் சரத்குமார் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு வளையல்கள் அணிவித்து விழாவைத் தொடங்கி வைத்தனர்.
250-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் பங்கேற்பு
மதுராந்தகத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் இந்த சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
இதில் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் கலந்து கொண்டனர்.
வளையல்கள், சீர்வரிசைப் பொருட்கள் வழங்கல்
இந்த நிகழ்ச்சியில் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் ஆகியோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, கர்ப்பிணிப் பெண்களுக்கு வளையல்கள் அணிவித்து சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். மேலும், கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசைப் பொருட்கள் மற்றும் ஐந்து வகையான உணவுகள் வழங்கப்பட்டன.












