Advertisement

“செல்போன் பயனர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி” – 15% வரை உயர்கிறது ஜியோ, ஏர்டெல், விஐ ரீசார்ஜ் கட்டணங்கள்!

இந்தியாவில் உள்ள முன்னணித் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா (Vi) ஆகியவை தங்களது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் கட்டணங்களை 12% முதல் 15% வரை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தக் கட்டண உயர்வு அடுத்த 3 முதல் 4 மாதங்களுக்குள் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் டேட்டா பயன்பாடு நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வரும் போதிலும், ஒரு பயனரிடமிருந்து கிடைக்கும் சராசரி வருவாய் (Average Revenue Per User) பெரிய அளவில் உயரவில்லை. 5G முதலீடுகள்: 5G நெட்வொர்க் உள்கட்டமைப்பை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்காகச் செய்யப்பட்ட பிரம்மாண்ட முதலீடுகளுக்கான லாபத்தை ஈட்ட நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

Advertisement

இம்முறை நேரடி விலை உயர்வாக இல்லாமல், பயன்பாட்டிற்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கும் வகையில் (Usage-based pricing model) மாற்றங்களைக் கொண்டுவர ஆராய்ச்சி நிறுவனங்கள் கணித்துள்ளன. அதாவது, அதிக டேட்டா பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் அவதிப்பட்டு வரும் நடுத்தர மக்களுக்கு, தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இந்த அடுத்தகட்ட ரீசார்ஜ் கட்டண உயர்வு மேலதிக நிதிப் சுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Advertisement

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement