தமிழக இளைஞர்கள் வெளிமாநிலங்களுக்குச் செல்வதைத் தடுக்கத் தமிழகத்திலேயே பன்னாட்டு எம்.என்.சி நிறுவனங்களைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகவும், அரசுப் பணிகளில் உள்ளூர் தொழிலாளர்களுக்கே முன்னுரிமை தரப்படும் என்றும் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.
தமிழக இளைஞர்கள் கூடுதல் ஊதியம் பெறும் வேலைவாய்ப்புகளுக்காகப் பெங்களூரு, ஹைதராபாத் போன்ற வெளிமாநிலப் பெருநகரங்களை நோக்கிப் புலம்பெயர்வதைத் தடுத்து, தமிழகத்திலேயே பன்னாட்டு எம்.என்.சி (Multi-National Company) தொழிற்சாலைகளை உள்கட்டமைப்பு ரீதியாகக் கொண்டு வருவதற்கான விரிவான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகத் தொழில்துறை அமைச்சர் செல்வி. கீர்த்தனா அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழக இளைஞர்கள் கூடுதல் ஊதியம் பெறும் வேலைவாய்ப்புகளுக்காகப் பெங்களூரு, ஹைதராபாத் போன்ற வெளிமாநிலப் பெருநகரங்களை நோக்கிப் புலம்பெயர்வதைத் தடுத்து, தமிழகத்திலேயே பன்னாட்டு எம்.என்.சி தொழிற்சாலைகளை உள்கட்டமைப்பு ரீதியாகக் கொண்டு வருவதற்கான விரிவான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகத் தொழில்துறை அமைச்சர் செல்வி. கீர்த்தனா அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு அரசு உள்கட்டமைப்பு திட்டப் பணிகளை இன்று நேரில் சென்று தீவிர ஆய்வு நடத்திய அமைச்சர், பாறைப்பட்டி மாநகராட்சி குப்பைக் கிடங்கில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்து மற்றும் நச்சுப் புகையால் மக்களுக்கு ஏற்படும் சுவாசக் கோளாறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, அறிவியல் பூர்வமாகப் விதிமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, விஸ்வநத்தம் சாலையில் சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வரும் மாநகராட்சி மாநாட்டு அரங்கக் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர், அங்கு உள்ளூர் தொழிலாளர்களை விடுத்து 30 வெளிமாநிலத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டிருந்ததைக் கண்டு கடும் அதிருப்தியடைந்தார். அரசு உள்கட்டமைப்புக் கட்டுமானப் பணிகளில் முற்றிலும் உள்ளூர் தொழிலாளர்களுக்கே முன்னுரிமை வழங்கி வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என ஒப்பந்ததாரரைக் கடிந்து கொண்ட அவர், செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழக அரசின் 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்ட வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் விரிவான தொலைநோக்குத் திட்டங்கள் சமர்ப்பிக்கப்படும் என்றார். மேலும், இளைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்த உள்ளூர் கல்லூரிகளில் சிறப்புப் பயிற்சிகள் வழங்க 100% பயனுள்ள திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், சிவகாசியில் கூடுதல் தீயணைப்பு நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு துரிதமாக அமைக்கப்படும் என்றும் உத்தியோகபூர்வமாகப் பிரகடனம் செய்தார்.













