Advertisement

செங்கல்பட்டு: அமமுகவில் புதிய செயலாளர்கள் நியமனம்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) தலைமைக் கழகத்தின் அறிவிப்பின்படி, செங்கல்பட்டு மத்திய மாவட்டக் கழகம் மற்றும் செங்கல்பட்டு தெற்கு மாவட்டக் கழகம் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உத்தரவின் பேரில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, செங்கை மத்திய மாவட்டக் கழக செயலாளராக டாக்டர் A. சதீஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், செங்கை தெற்கு மாவட்டக் கழக செயலாளராக T.S. அறிவகம் பொறுப்பேற்றுள்ளார்.

Advertisement

கட்சியின் அமைப்பு வளர்ச்சியை வலுப்படுத்தவும், மாவட்ட அளவிலான நிர்வாக பணிகளை தீவிரப்படுத்தவும் இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புதிய நிர்வாகிகள் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, பொதுமக்கள் தொடர்பு மற்றும் அமைப்பு பணிகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமமுக தலைமையின் இந்த அறிவிப்பு, செங்கல்பட்டு மாவட்ட அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. வரவிருக்கும் அரசியல் சூழ்நிலைகளை முன்னிட்டு கட்சி தனது அமைப்பை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement