Advertisement
,

கூடுவாஞ்சேரி குழந்தை உயிரிழப்பு: சோறு வடித்த சுடுநீரில் விழுந்த 5 வயது சிறுமி பலி!

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே தைலாவரத்தில் சோறு வடித்த சுடுநீரில் தவறி விழுந்து பலத்த தீக்காயமடைந்த 5 வயது பெண் குழந்தை, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்டிலில் விளையாடியபோது விபரீதம்

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் வல்லாள வெங்கடேஸ்வரலு (45). இவரது மனைவி அங்காளம்மா. இந்தத் தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

Advertisement

இவர்கள் குடும்பத்துடன் கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் ரயில்வே கேட் அருகே தற்காலிகக் கூடாரம் அமைத்துத் தங்கி, பூம்பூம் மாடு வளர்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இவர்களது மூன்றாவது பெண் குழந்தையான அவந்திகா (5), அங்கிருந்த மடக்குக் கட்டிலில் ஏறி குதித்து விளையாடிக் கொண்டிருந்தார்.

Advertisement

அப்போது எதிர்பாராத விதமாகக் கட்டிலின் அருகே வைக்கப்பட்டிருந்த சோறு வடித்த சுடுநீரில் குழந்தை தவறி விழுந்தார். இதில் பலத்த வெப்பக் காயமடைந்த குழந்தை வலியால் அலறித் துடித்தார்.

தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழப்பு

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை உடனடியாக மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவந்திகாவுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இருப்பினும், சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement