Advertisement

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் eKYC சிறப்பு முகாம்: திரண்ட பொதுமக்கள்!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கான விரல் ரேகை பதிவு eKYC சிறப்பு முகாம் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் (ரேஷன் கடைகள்) குடும்ப அட்டைதாரர்களுக்கான விரல் ரேகை பதிவு (Biometric eKYC) சரிபார்ப்பு சிறப்பு முகாம் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முழுவீச்சில் நடைபெற்றது.

Advertisement

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் தகுதியான பயனாளிகளுக்கு மட்டுமே முறையாகச் சென்றடைவதை உறுதி செய்யவும், குடும்ப அட்டைகளில் உள்ள குளறுபடிகள், போலி பெயர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் பெயர்களை நீக்கவும் eKYC சரிபார்ப்பைத் தமிழ்நாடு அரசு கட்டாயமாக்கியுள்ளது.

ஏற்கனவே பெரும்பான்மையான கார்டுதாரர்களுக்கு விரல் ரேகை சரிபார்ப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை கைரேகை பதிவு செய்யாமல் விடுபட்டுள்ள பயனாளிகளுக்காக இந்த ஒருநாள் சிறப்பு முகாம் இன்று நடத்தப்பட்டது. இதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரேஷன் கடைகளிலும் நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் பணியில் ஈடுபட்டு, பொதுமக்களின் ஆதார் எண் விவரங்களுடன் விரல் ரேகைகளைப் பதிவு செய்து சரிபார்க்கும் பணிகளை மேற்கொண்டனர்.

Advertisement

வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றிப் பதிவு செய்வதற்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. காலை 9 மணிக்குத் தொடங்கிய இந்த முகாமில் பொதுமக்கள் பலர் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் வந்து ஆர்வத்துடன் கைரேகையைப் பதிவு செய்து தங்களது ரேஷன் கார்டுகளைப் புதுப்பித்துக் கொண்டனர். குடும்ப அட்டை சேவைகளை மேலும் வெளிப்படைத்தன்மையுடன் மாற்ற அரசு முன்னெடுத்துள்ள இந்த முயற்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement