Advertisement

SBI ஜூனியர் அசோசியேட்ஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி!

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் SBI Junior Associates தேர்வுக்கு செப்டம்பர் 9 முதல் இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தொடங்குகின்றன.

🏦 SBI தேர்வுக்கு இலவச பயிற்சி
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் பல்வேறு அரசு போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், State Bank of India (SBI) Junior Associates தேர்வுக்கான அறிவிப்பு கடந்த 11.08.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு 20 முதல் 28 வயதுக்குட்பட்ட பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க 31.08.2026 கடைசி நாளாகும்.

Advertisement

📚 செப்.9 முதல் நேரடி பயிற்சி
SBI Junior Associates தேர்வுக்கு தயாராகும் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த போட்டித் தேர்வாளர்கள் பயன்பெறும் வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 09.09.2026 புதன்கிழமை முதல் நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. இந்தப் பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும். தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

📄 விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்
இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் போட்டித் தேர்வாளர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தரைத்தள டி-பிளாக்கில் செயல்படும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும், 044-27426020, 9499055895, 9486870577, 9344738148 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்று பயனடையலாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் மு. வீரப்பன், இ.ஆ.ப., கேட்டுக்கொண்டுள்ளார்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement