Advertisement

கேரள முதல்வர் காரை மறித்து மிரட்டிய காங்கிரஸ் நிர்வாகி செந்தி அனில் கட்சியிலிருந்து நீக்கம்!

கேரள முதல்வர் சதீசனின் வாகனத்தை வழிமறித்து மிரட்டிய வழக்கில் கைதான காங்கிரஸ் நிர்வாகி செந்தி அனில் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

கேரள முதலமைச்சர் வி.டி.சதீசனின் கான்வாய் வாகனத்தைப் பொதுவெளியில் அத்துமீறி வழிமறித்து மிரட்டல் விடுத்ததுடன், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரின் பணிக்குக் குந்தகம் விளைவித்த வழக்கில் கைதான காங்கிரஸ் நிர்வாகி செந்தி அனில் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

Advertisement

கேரள மாநில முதலமைச்சர் வி.டி.சதீசன் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகச் சென்றுகொண்டிருந்த போது, அவரது பாதுகாப்பு வாகனப் பிரிவை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட செந்தி அனில், பொதுவெளியில் மிரட்டல் விடுக்கும் தொனியில் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், முதலமைச்சரின் பாதுகாப்பை உறுதிசெய்ய முயன்ற காவல் துறையினரைத் தகாத வார்த்தைகளால் பேசி, அவர்களின் அரசுப் பணிக்குக் கடுமையான இடையூறை ஏற்படுத்தியதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் செந்தி அனிலை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

முதலமைச்சரின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்ட இந்தச் சம்பவம் கேரள அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், கட்சி விதிகளுக்கு முரணாகவும் பொதுவெளியில் அத்துமீறிச் செயல்பட்டதாகக் கூறி, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் செந்தி அனில் உடனடியாக நீக்கப்படுவதாகக் காங்கிரஸ் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement